மலேசியா உட்பட இந்தியாவுக்கு உலகநாடுகள் நன்கொடையாக அளித்த கொவிட்-19 நிவாரண பொருட்கள் விநியோகம்.

பல உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள்  நன்கொடையாக அளிக்கும் கொவிட்-19 நிவாரண பொருட்களை, இந்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது.

மொத்தம் 6738 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3856 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 16 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 4668 வென்டிலேட்டர்கள், சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை பெறப்பட்டுள்ளது.

கனடா, தாய்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா அமெரிக்காவின் ஜிலெட், சேல்ஸ்போர்ஸ், தாய்லாந்தில் உள்ள இந்திய அமைப்பு ஆகியவற்றிடமிருந்து மே 8ம் தேதி வந்த முக்கிய பொருட்கள்:

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (2404)

* ரெம்டெசிவிர் (25,000)

* வென்டிலேட்டர்கள் (218)

* பரிசோதனை கருவிகள் (6,92,208)

இந்த மருத்துவ பொருட்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.  இவற்றை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

வெளிநாட்டு கொவிட்-19 நிவாரண பொருட்களை பெற்று அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஒரு பிரத்தியேக ஒருங்கிணைப்பு பிரிவு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டு கடந்த 2ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.