வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் தேவைக்காக தமிழக அரசை தொடர்புகொள்ள சிறப்பு தொடர்பு எண்!

தமிழ்நாட்டில் இருந்து வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் அவர்களுடைய தேவைகளுக்காகவும் தங்களுக்கு தேவையான உதவிளுக்கு தமிழக அரசை தொடர்பு கொள்ள சிறப்பு தொடர்பு எண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு .

தற்போது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழக அரசை தொடர்பு கொள்ள தொடர்பு எண் வழங்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்கள் தங்களின் தேவைகளுக்காக தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக தமிழக அரசை தொடர்பு கொள்ள இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைச்சகம் என்று இருந்த துறையைத் தற்போது பதவியேற்றுள்ள தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் என பெயர் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.