தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு- எதற்கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் Covid-19நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது .

மே 10 முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை தமிழகத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

முழு ஊரடங்கு காலங்களில் காய்கறி கடைகள் இறைச்சி கடைகள் பகல் 12:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் முழுமையாக மூடப்படுகிறது.

போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய தேவையான பால் விநியோகம் மருந்து விநியோகம் மற்றும் பத்திரிக்கை விநியோகத்திற்கு தடை ஏதுமில்லை. ஊடகவியலாளர்கள் தொடர்ந்து செயல்படலாம்.

மருந்தகங்கள் மருத்துவமனைகள் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படலாம் .

நடைபாதை காய்கறிக் கடைகள் மற்றும் பூக்கடைகள் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் சேவை வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் முழுவதுமாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் அனுமதியை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.