திருச்சி பாஸ்போர்ட் சேவை மையம் 14ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி முதல் வருகிற 14-ஆம் தேதி வரை திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படாது.

மேலும் இந்த நாட்களில் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வருவதற்கு முன் பதிவு செய்தவர்களுக்கு மாற்று தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் போலீஸ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு இலவச தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன 1800-258-1800 மற்றும் 0431-2707203,2707404 மேலும் வாட்ஸ்அப் எண்களும் வழங்கப்பட்டுள்ளது- 7598507203.

மின்னஞ்சலும் வழங்கப்பட்டுள்ளது rpo.trichy@mea.gov.in

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு. ஆனந்த் அவர்கள் தெரிவித்திருக்கிறார்