ஆக்சிஜன் விநியோகத்திற்கு களமிறக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் .

இந்தியாவில் தற்போது Covid-19 நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது .அதனை சமாளிக்கும் வகையில் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்கும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சென்றடைவதற்கு இந்திய மத்திய அரசு இந்திய விமானப்படை விமானங்களை களத்தில் இறக்கியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-17 மற்றும் IL 76 Cargo Aircrafts சரக்கு விமானங்கள் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்கிறது. மீண்டும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பிறகு சாலை மார்க்கமாக அந்த லாரிகள் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

தற்போது விமானங்கள் டெல்லியிலிருந்து பனாகார்க்கிற்கு சென்றுள்ளன மருத்துவமனைகளுக்கு தேவையான நேரத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லவே மத்திய அரசு இந்த ஏற்பாட்டினை செய்து வருகிறது.