திருச்சியிலிருந்து வெளிநாடு செல்லும் மற்றும் வருகை தரும் பயணிகளின் கவனத்திற்கு -திருச்சி விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்

தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவே வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் விமான பயணிகள், மற்றும் தமிழகத்தில் இருந்து வெளிநாடு புறப்படும் விமான பயணிகள் கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் விமான பயணிகளுக்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமல் படுத்தி இருக்கிறது. அந்த இரவு நேர ஊரடங்கினால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பாடு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேர ஊரடங்கு நேரங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் விமான பயணிகள் தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ மற்றும் டாக்சி தேவைப்படுபவர்கள் தங்களது விமான டிக்கெட்டுகளை காண்பித்து விமான நிலையத்திற்கு வந்த அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமான பயணிகள் கட்டாயம் இ-பாஸ் விண்ணப்பித்து பெற வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது. மேலும் விமான நிலையத்தில் இருந்து அவர்களின் இல்லங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் உதவும் எனவும் தெரிவித்துள்ளது .

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானத்தில் தரையிறங்கும் அனைத்து வெளிநாட்டு விமான பயணிகளுக்கு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.