மறைந்த திரைப்பட நடிகர் திரு.விவேக் அவர்களுக்கு மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்திய வேதாரணியம் இளைஞர்கள் !

நாகை மாவட்டம்: வேதாரண்யத்தில் மறைந்த திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் திரு .விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டு இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சமூக சேவகரும் திரைப்பட நடிகருமான பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மறைந்தார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மிகவும் முனைப்புடன் செயல்படுத்தியவர் திரு. விவேக் அவர்கள் அவரின் கனவுகளை தற்போது தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் இளைஞர்கள் மாணவர்கள் இந்தப் பணியை சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.