தமிழரின் பாரம்பரிய கிராமியக் கலையை சிங்கப்பூரில் பரவச் செய்த சாதனை தமிழக தமிழன் !! -Paramasivam Karuppaiah Interview

திரு. பரமசிவம் கருப்பையா முதன்முதலாக டிக்டாக் சமூகவலைதளத்தில் கரகாட்டம் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பதிவேற்றம் செய்தார் அதற்கு அவருக்கு 4 இலட்சம் பார்வைகைள் கிடைத்தன பின்பு டிக்டாக்கில் சிங்கப்பூர் அளவில் மிகவும் பிரபலமானார்.

Paramasivam Karuppaiah, Tiktok Social Media Influencer.

வெளிநாட்டு ஊழியரான திரு. பரமசிவம் கருப்பையா வயது 31 தமிழரின் பாரம்பரிய கலைகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் .

இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருத்தாசலம் அருகே உள்ள பெரியநெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் .இவர் சிங்கப்பூரில் 7 வருடங்களாக கட்டுமானத்துறையில் பணியாற்றி வருகிறார்.

Paramasivam Karuppaiah, Tiktok Social Media Influencer

தன்னுடைய குடும்ப தேவைகளுக்காக சிங்கப்பூரில் பணியாற்றி வருவதாக சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளிதழான The Staraits Times நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது,தனது சொந்த ஊர் ஞாபகங்கள் வரும்பொழுது அவர் சிங்கப்பூரில் தேர்வு செய்யும் இடமாக தெரிவித்திருப்பது சிங்கப்பூரில் முக்கிய பகுதியாக கருதப்படும் தேக்கா பகுதியாகும்.

Paramasivam Karuppaiah, Tiktok Social Media Influencer.

திரு. பரமசிவம் கருப்பையா தேக்கா பகுதிக்கு செல்லும் பொழுது தனது சொந்த ஊரில் இருப்பது போலவும் தனது நண்பர்கள் உறவினர்களை காண்பது போல இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார்.

Screen Shot From The Straits Times (Fb)

டிக் டாக் சமூக வலைதளத்தை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துபவர்கள் மத்தியில் தனது தமிழக பாரம்பரிய கலைகளை உலகறியச் செய்வதற்காக பயன்படுத்தி வரும் திரு. பரமசிவம் கருப்பையா பாராட்டுக்குரியவர்.

சோதனைகளை சாதனைகளாக்க சிங்கப்பூரில் உழைத்து வரும் திரு. பரமசிவம் கருப்பையா அனைத்து இளைஞர்களுக்கும் ஒர் முன் உதாரணம்.

திரு. பரமசிவம் கருப்பையா The Straits Times நாளிதழுக்கு அளித்த பேட்டியினை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தை கிளிக் செய்யவும்.