முதல் நாளிலேயே 10 கோடி வசூல் செய்த “கர்ணன்” !!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.

விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் தரப்பிலும் அதிக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படம்.Covid19 நோய் பரவல் கட்டுப்பாடு காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் அதிக வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வெளிநாடுகளை பொறுத்தவரையில் இந்த திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது குறிப்பாக சிங்கப்பூரில் ரூ.50.63 லட்சமும்,ஆஸ்திரேலியாவில் ரூ.45.25 லட்சம். என அனைத்து தரப்பிலும் வெற்றி நடை போட்டு வருகிறது கர்ணன் திரைப்படம்.