சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் தங்கி இருப்பவருக்கு நோய்த்தொற்று!

சிங்கப்பூரில் தற்போது சமூக பரவல் என்பது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில். தற்போது சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் உள்ள ஒருவருக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரையில் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் மிகச் சிறப்பான மருத்துவ பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 நபர்களில் 19 நபர்கள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் ஆவார்கள்.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 19 நபர்களும் தற்போது குவாரண்டைன் (தனிமைப்படுத்துதல்) எனப்படும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .