திருத்துறைப்பூண்டி பகுதியில் அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்று .

திருவாரூர் மாவட்டம்: திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் தற்போது கொரோனா நோய் அதிகரித்து வருகிறது .

தமிழக அரசு இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு. இருப்பினும் மக்கள் தனி மனித சுகாதாரம் சமூக இடைவெளி முகக் கவசங்கள் அணியாத காரணத்தினால் திருத்துறைப்பூண்டி நகரப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் மட்டும் தற்போது 40 க்கும் மேற்பட்டோர் கொரோனாநோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .

திருத்துறைப்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும கடுமையாகப் போராடி வருகின்றனர். இருப்பினும் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தனிமனித சுகாதாரம் சமூக இடைவெளி கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை தனிமனித சுகாதார மேம்பாடுகள் மூலமாகவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். தற்போது அதிகரித்துவரும் கொரோனா கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம்.