பிரம்மாண்டமாக உருவாகி வரும் திருச்சிராப்பள்ளி புதிய விமான நிலையம் அடுத்த வருடம் 2022 இல் திறக்கப்படுகிறது !?

திருச்சிராப்பள்ளியில் தற்போது பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் தற்போது விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதியதாக கட்டப்பட்டு வரும் முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ் களுடன் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது புதிய முனையம் .

தற்போது கட்டப்பட்டு வரும் புதிய டெர்மினல் கட்டிடம் அடுத்த வருடம் அதாவது 2022ஆம் ஆண்டு திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.951.28 கோடியில் இந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை கடந்த ஆண்டு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.

தற்போது வரை கட்டப்பட்டு வரும் புதிய விமான முனையம் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன .அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2022 ஆம் ஆண்டு இந்த புதிய விமான நிலையம் திறக்கப்படும் என இந்திய விமான துறை தெரிவித்துள்ளது .

இந்த புதிய விமான நிலையம் ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் கட்டப்படுகிறது.மொத்த பரப்பளவு 75 ஆயிரம் சதுர அடி ஆகும் .

மேலும் கட்டப்பட்டு வரும் புதிய விமான முனையத்தில் பத்து ஏரோ பிரிட்ஜ்களும் மற்றும் 48 பரிசோதனைக் கவுண்டர்களும் அமைக்கப்படவுள்ளன.