தஞ்சாவூர் 56 மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது .

56 மாணவிகளுக்கு Covid19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்

மேலும் 8ஆம் தேதி அந்த பள்ளியில் உள்ள மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் அந்த மாணவிக்கு Covid19 பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 20 மாணவிகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 36 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆசிரியருக்கு தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.