திருச்சி விமான நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .!

பிப் 28:திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற சர்வதேச நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இதே திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறையினர் கைப்பற்றிம் கடத்தியவர்களை கைதும் உள்ளனர் .

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை செய்யும் பொழுதே சில பயணிகள் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை கடத்தி வருகின்றனர் அப்போது அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை கைப்பற்றும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில்.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்படும் சோதனைக்கு பயந்து அங்கேயே விட்டுச் சென்றார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .