சிங்கப்பூர்: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து .

மார்ச் 1 திங்கள்கிழமை காலை உட்லண்ட்ஸ் நோக்கி செல்லும் செலார் எக்ஸ்பிரஸ் காலையில் வெள்ளை நிற SUV கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காலை 8.05 மணிக்கு உட்லேண்ட்ஸ் அவென்யூ 12 EXIT முன் நடைபெற்ற விபத்து குறித்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது (எஸ்.சி.டி.எஃப்)

மேலும் இந்த கார் கவிழ்ந்த விபத்தில் வேறு எந்த ஒரு கார்களும் ஈடுபடவில்லை என தெரியவருகிறது.

ஓட்டுனர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

அந்த காரின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. மேலும் வாகனத்தை ஓட்டியவருக்கு மிகச்சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்தபோது அவர் மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.