சிங்கப்பூர் துவாஸ் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர் மாரிமுத்துவுக்கு- நிதி திரட்டும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் துவாஸ் பகுதியிலுள்ள தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 மாதத்திற்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தையை பார்க்காமலேயே இவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள திரு. மாரிமுத்து அவர்களின் குடும்பத்திற்கு உதவுவதற்காக சிங்கப்பூரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் நிதி திரட்டி வருகின்றன.

Give Asia என்று நிதி திரட்டும் இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்ட வருகிறது. அதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 21,141 நபர்கள் நன்கொடை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.