மீண்டும் மீண்டும் முதலிடம் பிடிக்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்! !

உலகின் தலை சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தலை சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கடந்த ஏழு முறையும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமே வெற்றி பெற்றது. தற்போது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருப்பதால் தொடர்ந்து 8வது முறையாக உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .

ஒரு விமான நிலையத்திற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் சாங்கி விமான நிலையத்தில் இருப்பதாகவும் மேலும் பயணிகள் போக்குவரத்தை கையாளுவதில் சிறந்து விளங்குவதாகவும் .

பொழுதுபோக்கு அம்சங்கள், சுகாதார வசதிகள் ,பொருட்கள் அங்காடிகள், விமான நிலையத்திற்கான சீரான போக்குவரத்து, சிறப்பான விமான சேவை தூய்மையை சிறப்பாக கடைபிடித்தல், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவைகளில் சிங்கப்பூர் விமான நிலையம் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .