சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக போலி சான்றிதழ் வழங்கியதாக 15 வெளிநாட்டு ஊழியர்களிடம் விசாரணை .

சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக 15 வெளிநாட்டு ஊழியர்கள் போலி சான்றிதழ் வழங்கியதாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூரின் மனித வள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலைகளுக்காக விண்ணப்பிக்கும் போது அந்த அந்த 15 ஊழியர்கள் போலி சான்றிதழ் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு அமைப்பு. இந்தியாவில் செயல்பட்டு வரும் மாணவ் பாரதி பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்பட்ட 41,000 பட்டய சான்றிதழ் களில் 5,000 பட்டைய சான்றிதழ் மட்டுமே தகுதி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது.

அந்த 15 வெளிநாட்டு ஊழியர்கள் இமாச்சல் மாநிலத்தில் உள்ள மாணவ் பாரதி பல்கலைக்கழகத்தில் பெற்ற சான்றிதழ்களையே வேலைகளுக்காக விண்ணப்பிக்கும்போது வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஊழியர்களின் போலி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் மேலும் சிங்கப்பூருக்கு மீண்டும் வர முடியாத அளவிற்கான தடை விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் அதாவது புலம்பெயர் ஊழியர்கள் சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகளும் உள்ளன.