மக்கள் சேவையே மகேசன் சேவை, மருத்துவர் மனோகரன்

சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மனோகரன் தற்போதைய Covid 19 சூழல் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார் .

Covid19 நோய்த்தொற்று துவக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்றுவரை சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் மனோகரன்.

நோய்தொற்று பற்றிய விழிப்புணர்வை விட நோயாளிகளுக்கு பயமே அதிகமாக இருந்தது என தெரிவிக்கிறார் மருத்துவர் மனோகரன்.

நோய்த்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது தன்னுடைய வீட்டில் உள்ள உறவினர்களை பார்க்காமலும் தனது வீட்டிற்கு செல்லாமலும் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார் மருத்துவர் மனோகரன்.

தற்போது இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நோய் தொற்று தடுப்பூசி ஆனது மிகவும் பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார் .

தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதால் மக்கள் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் வரை மக்கள் நோய்த்தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மருத்துவர் தெரிவிக்கிறார்.

நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியவர்களுள் முதன்மையானவர்கள் முன் களப்பணியாளர்கள். மருத்துவர்கள் நாங்கள் எங்கள் குடும்பத்தையும் உறவினர்களையும் விட்டுவிட்டு நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை பாதுகாக்க முயற்சி எடுத்து வரும் நிலையில். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரமுடியும் மக்கள் சேவையே மகேசன் சேவை என முன் களப்பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும், பொதுமக்களிடையே தனிமனித இடைவெளி தனிமனித சுகாதாரம் இருந்தால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட முடியும் என மருத்துவர் மனோகரன் தெரிவிக்கிறார்.