மின் கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.

சிங்கப்பூர் உட்பட சர்வதேச நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்ப்பதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தோகாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா விற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு. விஜயவாடா விற்கு 64 பயணிகளுடன் வருகை தந்தது .

அந்த விமானம் விஜயவாடா விமான விமான நிலையத்தில் தரை இறங்கும்போது ஓடு பாதையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது இதனால் பயணிகள் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை பாதிப்படைந்தது பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கி விடப்பட்டனர்.

இந்த விமான விபத்தில் விமானத்தின் இறக்கை மட்டுமே சிறிய அளவில் பாதிப்படைந்தது மேலும் பயணிகள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என விமான நிலைய ஊழியர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.