சிங்கப்பூரில் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்

உலகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் பணி நிமித்தமாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், அவற்றில் சிலர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் அனைவரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் லிட்டில் இந்தியா பகுதியில் ஏராளமான தமிழர்களும் தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.