பொங்கலுக்கு வெளிவரும் ‘மாஸ்டர்’ திரைப்படம்…பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகள், ரசிகர்கள்…

சிங்கப்பூரில் பொங்கலுக்கு நடிகர்கள் விஜயும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய பிறகு, பிரபலங்களால் நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது.

‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்தது.

ஓரு ஆண்டு காலமாகக் காத்திருக்கும் ரசிகர்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் உள்ளனர்.

சிங்கப்பூரில் ‘மாஸ்டர்’ திரைப்படம் Cathay, Golden Village, Carnival Cinemas போன்ற திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

வழக்கமாக Carnival Cinemas திரையரங்கில் திரைப்படத்தின் முதல் காட்சி இடம்பெறும் என்பதால் ரசிகர்கள் எல்லோரும் அதன் நுழைவுச்சீட்டுகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.

ரசிகர்கள் திரையரங்கின் இணையப்பக்கத்தை நாடியதால், அதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு சிறிய அளவிலான தமிழ் திரைப்படங்களை மட்டுமே காட்சிப்படுத்திய Golden Village திரையரங்கும், ‘மாஸ்டர்’ திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகச் சொன்னது.