மலேசியா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அடுத்த மாதம் துவங்கவுள்ளது!

மலேசியாவில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நோய் covid19 தடுப்புக்கான தடுப்பு ஊசிகள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Pfizer-BioNTech ஆகிய மருந்துகள் மலேசியாவிற்கு கிடைத்தவுடன் அந்த பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதலில் இந்த தடுப்பு மருந்துகள் ஒரு மில்லியன் நபர்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அதிகாரிகளுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தடுப்பூசி ஆனது இரண்டு கட்டமாக போடப்பட உள்ளது இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏப்ரல் மாதத்தில் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மலேசிய அரசு தனது நாட்டினுடைய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் வகுத்து உள்ளதாக தெரியவந்துள்ளது .