கிருமித் தொற்று இன்னும் தொடர்வதால்;எச்சரிக்கை நடவடிக்கை தொடர வேண்டும்;அமைச்சர் லாரன்ஸ் வோங்.

சிங்கப்பூரில், 2 குடும்பங்களில் சமீபத்தில் கிருமித்தொற்று அடையாளம் கண்டறியப்பட்டது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிருமி தொற்று பரவும் பகுதிகள் ஏற்படலாம் என்பதன் நினைவு படுத்தும் விதமாக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறைக்குப் பிந்திய முதல் நாளான இன்று, பொங்கோல் பகுதியில் இருக்கின்ற (வாட்டர்வே) (Waterway) துவக்கப்பள்ளிக்குச் சென்று அவர் ஊடக செய்தியாளர்களிடம் பேசினார்.

ராஃபிள்ஸ் (Raffles) பெண்கள் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவிகள், கொரோனா தொற்றால் பாதிப்புள்ளாகிய குடும்பத்தோடு தொடர்புடையவர்கள்.

அவர்களில் ஒருவருக்கு மட்டும் , சென்ற மாதம் 31ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இரண்டாவது மாணவி, முதல் மாணவியின் இல்லத்திற்கு சென்ற மாதம் 27ஆம் தேதி சந்தித்து , சில மணி நேரம் அங்கு உரையாடிக் கொண்டிருந்தார்.

பின்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு சென்றபோது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சென்ற மாதம் 31ஆம் தேதி உறுதியானது.