சிங்கப்பூரில் பூங்காவில் வெள்ளம் வராமல் மழை நீர் வடிய சிறப்பு வசதிகள்…

நேற்று சிங்கப்பூரில் பீஷான் அங் மோ கியோ பூங்காவில் வெள்ளம் ஏற்பட்டு விட்டது என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அந்த பூங்கா அதன் பணியை செவ்வனே செய்து வருகிறது என்பது உண்மை. மழை நீரை வடியவிடும் ஒரு கால்வாயாக அந்த பூங்கா செயல்பட்டு வருகிறது. ஆம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இருந்தாலும் அந்த பூங்காவில் நீர்வழி வழக்கமாக செயல்பட்டது.

ஆற்றின் ஒரு பகுதி அந்த பூங்கா வழியாக செல்கிறது. அந்தப் பகுதி 3 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் ஏறி இறங்கினாலும் அதை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில்
இந்நிலையில் அந்தப் பூங்காவில் பல பாதுகாப்பு அறிவிப்புகளை காணலாம் என்றும் அதன் மூலம் பொதுமக்கள் நீர் மட்டம் உயர்வு பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய பூங்கா கழகம் தெரிவித்துள்ளது.

மழை இல்லாத வெயில் காலத்தின் போது அந்த பூங்காவில் நடுவே இருக்கும் ஓடைப் போன்ற சிறு பகுதியில் தான் தண்ணீர் ஓடும். கடும் மழை பெய்யும் போது பக்கத்தில் இருக்கும் தரைப்பகுதி நீரை உள்வாங்கி கொண்டு அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மழை நீரை வடிய செய்துவிடும்.