சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்…

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 33 பேருக்கு கிருமி தோற்று உறுதியானது. அவர்கள் இந்தியா, மியான்மர், பங்களாதேஷ், மலேசியா மற்றும் இந்தோனேசியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் நிரந்தர வாசிகள் ஐவர் மேல்நிலை வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவரை சார்ந்தவர்கள். இருவர் நீண்டகால வருகையை அனுமதி வைத்திருப்பவர்கள்.

ஒருவர் குறுகியகால வருகை அனுமதி வைத்திருப்பவர். 18 பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர். மற்றொருவர் மாணவர் அனுமதி வைத்திருப்பாராம்.

அந்த 33 பேரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று சமூக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.