மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதை விட பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது மிகவும் முக்கியம்..!!

வேலை வாய்ப்பை பெறுவதற்காக கல்வியில் தேர்ச்சி அடைவது மிகவும் முக்கியம் இருப்பினும் பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிடுவது தான் முக்கியம் என தொடக்க பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகளை பெறுவதற்கு முன் உயிர் இழந்த பெற்றோர் கூறியுள்ளனர்.

ரபேல் பிறந்த 8 மாதத்திலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல முறை ஒழுங்காக பள்ளிக்கு செல்ல முடியவில்லை, ஆனால் இதை துளி கூட பொருட்படுத்தாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கவனம் செலுத்தி தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வு எழுதினார்.

அவர் இந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே உயிரிழந்தார். இவர் எழுதிய தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று வந்தார். இவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் விரைவு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றாலும் நாங்கள் அதை பொருட்படுத்த மாட்டோம்.

ரபேல் வாழ்க்கை என்னும் தேர்வில் வெற்றி பெற்று விட்டார். நாங்கள் அவனை பற்றி பெருமிதம் கொண்டுள்ளோம். பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளின் சமூக உணர்வு ரீதியான தேவைகளை நினைத்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகளை எவ்வளவு பெருமையாக பேச முடியுமோ அவ்வளவு பேச வேண்டும். அவ்வாறு செய்வது பிள்ளைகளை மேலும் சிறப்பாக செய்ய வழிவகுக்கும். இவருடைய இறுதி சங்கில் அறிமுகமில்லாத பலர் வந்துள்ளனர்.