சிங்கப்பூரில் நேற்று மேலும் 5 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்..!!

சிங்கப்பூரில் நேற்று 5 பேர் கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 58,124 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் 31 பேர் கிருமித் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக பராமரிப்பு நிலையங்களில் 29 பேர் உள்ளனர். இதுவரை கிருமித் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 301 யீஷூன் அவென்யூ 2இல் அமைந்துள்ள NTUC FairPrice கிளைக்கு சென்றதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்கள் இந்த மாதம் 21 ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அங்கு சென்றுள்ளனர்.