திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சூரசம்ஹார விழா!

திருவாரூர் மாவட்டம்: திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.

சூரசம்ஹார விழாவினை திருத்துறைப்பூண்டி அகமுடையார் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் சூரசம்ஹார விழா விற்கு கட்டுப்பாடுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சூரசம்கார விழாவானது குறைவான பக்தர்களுடன் கோவிலின் நுழைவு வாயில் அருகிலேயே நடைபெற்றது .

ஆலயத்தினுள் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்பு அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் திருத்துறைப்பூண்டி வீதிகளில் வீதி உலாவாக காட்சியளித்தார்.

இந்த நிகழ்வில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து பக்தர்களுக்கும் திருத்துறைப்பூண்டி அகமுடையர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .