சிங்கப்பூரில் மாணவர்கள் அரும்பொருளகங்களைக் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..!!

சிங்கப்பூரில் உள்ள தேசிய மரபுடைமைக் கழகம் பள்ளி விடுமுறையின் போது மாணவர்கள் நேரடியாக மற்றும் இணையம் வழியாகவும் நாட்டிலுள்ள பல அரும்பொருளகங்களைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

Children’s Season என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் வழி இளம் வயதினர் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மரபுடைமை பற்றி தெரிந்து கொள்ளலாம். 22 அரும்பொருளகங்கள் 70க்கு மேற்பட்ட கண்காட்சிகளிலும் திட்டங்களையும் வழங்க உள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் சில்ட்ரன்ஸ் சீசன் என்ற நிகழ்ச்சியில் இந்த ஆண்டு Ai என்னும் ஆறு வயது சிறுவன் கதாபாத்திரம் இடம்பெற உள்ளது. அந்த சிறுவனின் படங்களை மாணவர்கள் நேரிடையாக மட்டுமின்றி இணையம் வழியாகவும் கண்டுபிடிக்கலாம்.

இணையவழி இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ளது . இதன் தொடர்பில் இந்திய மரபுடைமை நிலையம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது.