சிங்கப்பூரில் சாலை சந்திப்பில் லாரியில் இருந்து விழுந்த சரக்கை தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..!!

சிங்கப்பூரில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் லாரியில் இருந்து சரக்கு பெட்டி ஒன்று கீழே விழுந்தது. இந்த சரக்கு பெட்டியை தூக்குவதற்கு உதவி செய்த கட்டுமான ஊழியர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது குறித்து முகநூலில் சிங்கப்பூர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று 400க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.

இந்தக் காணொளி ஒன்றில் சாலை சந்திப்பில் நடுவில் விழுந்த சரக்கை எடுப்பதற்கு ஒருவர் மிகவும் சிரமப்படுகிறார். வாகன போக்குவரத்து குறையாத நிலையில் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.

அப்பொழுது இவரை நோக்கி ஓடிவந்த கட்டுமான ஊழியர் ஒருவர் உதவி செய்துள்ளார். இருவரும் அந்த சரக்கை தூக்கி நிறுத்தும் வேளையில் ஒருவர் தள்ளுவண்டியில் வருகிறார். இவர்கள் பின்னர் சரக்கை தள்ளுவண்டியில் வைத்து அதை சாலையிலிருந்து நகர்த்துகின்றனர்.

சாலையில் ஒரு காரில் இருந்து காணொளியை எடுத்துள்ளார். இந்த கட்டுமான ஊழியர் அடையாளம் தெரியாத அவருக்கு உதவியதற்கு மிக்க நன்றி, உங்களுடைய இறக்கமான செயல்கள்தான் சிங்கப்பூரை சிறப்படைய செய்கிறது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மேலும் பலர் இவரை பாராட்டி வருகின்றனர்.