சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்த ஆடவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது..!!

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக 40 வயது ஆடவர் மீது பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது.

வாம் குவொக் ஹான் ஜோலோவன் என்பவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி முன்னாள் அரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் படிகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகின்றது. பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு இந்த இடம் தடை செய்யப்பட்டது.

மேலும் 2015ஆம் ஆண்டு 28ஆம் தேதி தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்றம் தோ பாயோ அக்கம்பக்க காவல்நிலையம் போன்றவற்றிற்கு அருகில் இருந்த இந்த ஆடவர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்கள் காரணமாக மறுநாள் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர். இவர் மீது நிரூபிக்கப்பட்டால் மொத்தம் பத்தாயிரம் வெள்ளி வரை இவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். காவல்துறை அனுமதி இன்றி பொதுக்கூட்டங்களை நடத்தி இவற்றில் கலந்து கொள்வது போன்றவை பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களாகும். சிங்கப்பூரர்கள் சில நேரத்தில் கூட்டம் நடத்தவோ கருத்துக்களை வெளிப்படுத்த காவல்துறை அனுமதி தேவையில்லை.