சிங்கப்பூருக்கு மலேசியா ஜப்பான் நாடுகளில் இருந்து வந்தவர்களா நீங்கள்..? உங்களுக்கு தான் இந்த புதிய கட்டுப்பாடுகள்..!!

சிங்கப்பூருக்கு மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து நவம்பர் 23 முதல் வரும் பயணிகள் அனைவரும் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட வசதிகளில் இரண்டு வாரம் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

இருநாடுகளுக்கும் கடந்த இரண்டு வாரங்களில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கும் இது பொருந்தும். Reciprocal Green Lane எனப்படும் இருதரப்பு தடையற்ற பயணம் முறை அவ்வப்போது மேற்கொள்ளப்படும். பயண ஏற்பாடு போன்றவற்றில் சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவர்.

ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் ஏற்கனவே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறி விதிவிலக்கு பெற்றவர்களும் புதிய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டுமென்று அமைச்சகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் வசிப்பதற்கு இடம் உள்ளவர்கள் வீட்டில் தங்கும் விடுதியில் இருந்து விதிவிலக்கு பெறலாம் என்று அக்டோபர் மாதத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்ற 14 நாட்களில் மலேசியாவில் இருந்து இங்கு வரும் பயணிகள் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னர் கிருமித்தொற்று பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் நிரந்தர வாசிகள் இல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இந்த கட்டுப்பாடு இந்த மாதம் 27ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். மலேசியா ஜப்பான் போன்ற நாடுகளில் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.