ஹாங்காங் சிங்கப்பூர் இடையில் தொடங்க உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பயண முறை குறித்து மேலும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது..!!

ஹாங்காங்கில் நிலவரம் மோசமாக உள்ளதால் சிங்கப்பூருக்கும் ஹாங்காங் இடையில் தொடங்கப்பட உள்ள கட்டுப்பாடு உள்ள பயணம் குறித்து கூடிய விரைவில் மேல் விவரம் வெளியிடப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

பயண முறை தொடங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண முறை குறித்து சிலர் கேள்வி எழுப்பியதாக ஆணையம் அறிவித்துள்ளது. ஆணையம் நிலவரத்தைப் பற்றி தகவல் பெறுவதற்கு சுகாதார அமைச்சராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கமும் ஹாங்காங் அரசாங்கமம் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது, சிங்கப்பூர் ஹாங்காங் இடையிலான விமான சேவை ஏற்பாட்டின்படி ஒரு வார அடிப்படையில் நாள் ஒன்றுக்கு பதிவாகும் சராசரி தொடர்பில்லாத கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 7க்கு மேல் அதிகமாக இருந்தால் இந்த பயண முறை ரத்து செய்யப்படும் .

ஹாங்காங்கில் இன்று கிருமி பரவல் சம்பவங்கள் 26 புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 21 உள்ளூர் சம்பவங்களாகும். திங்கட்கிழமையில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஹாங்காங்கில் தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் பள்ளிகள் பிள்ளைகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.