சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்கு இடையே சிறப்பு பயணம் முறை திட்டமிட்டபடி நாளை தொடங்க உள்ளது..!!

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்கு இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணம் திட்டமிட்டபடி நாளை தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் .

ஹாங்காங்கில் 4 ஆம் கட்டக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஹாங்காங்கில் நோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருவதால் இருதரப்பு சுகாதார அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர் என்றும் நிலைமையை அவர்கள் நுணுக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு தரப்பு ஏற்பாட்டில் சிங்கப்பூரில் அல்லது ஹாங்காங்கில் ஏழு நாட்களில் சராசரியாக 5 க்கும் அதிகமான தொடர்புபடுத்தப் படாத புதியதொரு சம்பவங்கள் பதிவு ஆனால் இந்த சிறப்பு பயணம் ரத்து செய்யப்படும். இந்த எண்ணிக்கை தற்போது 2.14 ஆக உள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.