சிங்கப்பூரில் வேலைக்கு ஆள் எடுப்பதில் அதிகமான பாகுபாடு.! பல நிறுவனங்களின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து..!!

சிங்கப்பூரில் வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பதில் அதிக பாகுபாடு கட்டிய சுமார் 70 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது . முதல் அரையாண்டுக்கான தகவல்களை வெளியிட்ட வேலை தொடர்பான அறிக்கையில் இது குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. சென்ற ஆண்டு ஒப்பிடும் பொழுது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2019ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 35 முதலாளிகள் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

மனிதவள அமைச்சகம் முத்தரப்பு பங்காளித்துவ அமைப்புக்கும் அளிக்கப்பட்ட புகார்கள் அமைச்சின் விசாரணைகள் போன்றவை மூலம் இந்த முதலாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பாகுபாடுகளை கண்டறிய மனிதவள அமைச்சகம் தரவு பகுப்பாய்வு பயன்படுத்தி வருகின்றது. இதன்மூலம் 43% இதுகுறித்த புகார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளவை புகார்களின் மூலம் தெரியவந்துள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இது போன்று கண்டுபிடிக்கப்படும் முதலாளிகள் நியாய பரிசீலனை சட்ட அமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சலுகைகள் ஒரு ஆண்டில் இருந்து இரு ஆண்டு வரை ரத்து செய்யப்படும்.

அந்தக் காலகட்டத்தில் இவர்கள் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்க்கவும் பணியில் இருப்போர் அனுமதியினை புதுப்பிக்கவும் முடியாது.