சிங்கப்பூரில் போதைப் பொருள் கும்பல்கள் போதைப்பொருள் கடத்துவதற்கு புதிய வழிகளை மேற்கொள்கின்றனர்..!!

சிங்கப்பூரில் உள்ள போதை கும்பல் போதைப்பொருளை கடத்த புதிய வழிகளை பயன்படுத்துகின்றன என மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. உலகெங்கும் கிருமி பரவல் அதிகரித்துள்ளதால் உலகெங்குமுள்ள எல்லைகள் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இதனால் இவர்கள் அதனை சாதகமாக பயன்படுத்தி உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. தேங்காய் பப்பாளி பழம் போன்ற வற்றில் போதை பொருட்களை ஒளித்து வைப்பது போன்றவையும் செயல்பட்டு வருகின்றன.

மலேசியாவிலிருந்து போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கொண்டு வர ஆளில்லா வானூர்தியை பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். என கடந்த சுமார் 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு 14.3 கிலோகிராம் அபின் கைப்பற்றப்பட்ட சில நாட்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.