சிங்கப்பூரில் புதியதாக 4 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!! உள்ளூர் அளவில் இன்றும் யாருக்கும் பாதிப்பு இல்லை..!!

சிங்கப்பூரில் புதியதாக 4 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சமூக அளவில் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

தொடர்ந்து 9வது நாளாக உள்ளூர் அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை. புதிதாக பாதிக்கப்பட்ட 4 பேரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் அறிவித்தது . இவர்களையும் சேர்த்து கிருமித்தொற்று உறுதி ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 58,139 ஆகும்.