சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை வெளியிடப்படும்..!!

சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வரும் 25-ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படும் .

இந்த கிருமி தொற்று பரவி வரும் சூழலில் மாணவர்கள் தங்கள் பள்ளி மண்டபத்திற்கு பதிலாக வகுப்பறைகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியிடப்படும். உடல் நலம் குன்றியோர் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றுபவர்கள் போன்றோர் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரக்கூடாது.

சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு கழகத்தின் இணையதளத்தில் 25 ஆம் தேதி 11:30 மணியிலிருந்து அவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.