சிங்கப்பூரில் Trip.com என்ற இணைய தளத்துடன் இணைந்து சிங்கப்பூர் பயணத்துறை கழகம் கைகோர்த்துள்ளது..!!

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் Trip.com என்ற இணையத்தளத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பயணிகளுக்கு சுற்றுலா செல்ல இந்த திட்டம் கைகோக்கும்.

மூன்று ஆண்டு உடன்பாட்டின்படி சிங்கப்பூரிலுள்ள பயணிகளுக்கு ஏற்ற பயணங்களை விளம்பரப்படுத்துவது, சந்தைப்படுத்துவது மற்றும் தகவல் பகுப்பாய்வு, உற்பத்தி துறை சார்ந்த மேம்பாடு போன்ற அம்சங்களில் இது அதிக கவனம் செலுத்தும்.

மேலும் சீனா, ஹாங்காங், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகளை கவரும் வகையில் இந்த பங்காளித்துவ உடன்பாடு வகைசெய்யும் என்றும் அறிவித்துள்ளது.