சிங்கப்பூரில் இரட்டிப்பான முதுநிலை கல்வி கட்டணம் மிகுந்த குறைகூறலால் பின்வாங்கியது NUS கழகம்..!!

சிங்கப்பூர் முதுநிலை கல்வி கட்டணம் இரட்டிப்பாகிய 3 நாட்களுக்கு பிறகு மாணவர்களின் குறைகூறல்களால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள கழகம் இதை மீட்டு கொண்டுள்ளது.

வர்த்தக பகுப்பாய்வு தொழில்நுட்பத்திற்கான முதுநிலை கல்வி கட்டணம் சிங்கப்பூரர்களுக்கு 20 ஆயிரம் வெள்ளி முதல் 21 ஆயிரத்து 400 வெள்ளி வரை அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகம் Systems Science இந்த படிப்பை நடத்தி வருகின்றது.

புதிய கல்வி ஆண்டில் சேர மாணவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு சிங்கப்பூர் அதற்கான கட்டணம் 44,500 வெள்ளி முதல் 49,770 வெள்ளி வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்புதல் கடிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் ஒப்புக் கொண்ட இரண்டாவது நாள் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இவர்கள் கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்கள் வாயிலாக பல எதிர்ப்புகள் வந்துள்ளன . இதன் காரணமாக புதிய மாணவர்களும் பழைய கட்டணம் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டண உயர்வு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு கழகத்தின் தலைமை நிர்வாகி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.