சிங்கப்பூரில் இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த ஆறு பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..!!

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து ஒரு வாரமாக உள்நாட்டில் எவருக்கும் கிருமித்தொற்று அடையாளமே இல்லை.

புதிதாக பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூர் இந்தியாவில் இருந்து திரும்பியவர். திங்கட்கிழமை இவருக்கு நோய்க்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து பேரும் கிருமித்தொற்று அறிகுறி எதுவும் தென்படவில்லை. இவர்களில் ஒருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர். அவர் பிரிட்டனில் இருந்து வந்துள்ளார். மற்றொருவர் பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

மீதமுள்ள மூன்று பேரும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். இவர்கள் பிலிப்பைன்ஸில் இருந்தும் மியான்மரில் இருந்து வந்துள்ளனர். சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து இவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து இவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,130 ஆகும்.