‘சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கிருமித் தொற்று தொடர்பான செலவுகளுக்காக காப்பீடு வாங்கிக்கொள்ளலாம்..!!

சிங்கப்பூரில் பயணிகள் தங்கியிருக்கும் காலத்தில் கிருமி தொற்று தொடர்பான செலவுகளுக்காக காப்பீடு வாங்கிக்கொள்ளலாம். சாங்கி விமான குழுமமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .

AIG Asia Pacific Insurance,
Chubb Insurance Singapore Limited
HL Assurance போன்ற நிறுவனங்கள் காப்பீடுகளை வழங்க உள்ளன. மருத்துவ சிகிச்சை மருத்துவமனை செலவு போன்றவற்றிற்காக 30 ஆயிரம் வெள்ளி வரை காப்பீடு வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டால் இதற்கான மருத்துவ செலவு முழுமையாக அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காப்பீட்டு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மருத்துவ செலவுகளை ஒரு பகுதியை அவர்கள் ஈடுகட்ட முடியும்.