இந்தியாவில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது..!!

இந்தியாவின் பிரபலமான வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் நிறுவனமான டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதற்கு முன்னதாக லஷ்மி விலாஸ் வங்கி செப்டம்பர்-2019 முதல் ரிசர்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் தொகை மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவித்தவுடன் இந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

டிபிஐஎல் வங்கி சிங்கப்பூரில் உள்ள டிபிஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் வங்கியாகும். லக்ஷ்மி
விலாஸ் வாங்கி நிறுவனத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக DBIL வங்கி ரூபாய் 2500 கோடி கூடுதல் மூலதனத்தைக் கொண்டு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியில் மோசமான கடன்கள் அதிகரித்ததன் காரணமாக 2020 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர இழப்பு 397 கோடியாக உயர்ந்துள்ளது என முன்னதாக அறிவித்திருந்தது.

இதன் காரணமாகவே இந்த இணைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்தியாவில் உள்ள லஷ்மி விலாஸ் வங்கி லிமிடெட் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான பல சரிவுகளை கண்டு அதன் நிகர மதிப்பு குறைந்துள்ளது இதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிபிஐல் வங்கி மிகவும் வலுவான மூலதன ஆதரவுடன் ஆரோக்கியமான இருப்பு நிலையைக் கொண்டுள்ளது. ஜூன் 30 2009 நிலவரப்படி இதன் மொத்த ஒழுங்குமுறை மூலதனம் 7 ,150 கோடியாக இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் டிபிஐல் வங்கி உறுப்பினர்கள் வைப்புத்தொகையாளர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் போன்றோர்களிடம் இருந்து பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபணைகளை நவம்பர் 20ஆம் தேதி 5 மணிக்குள் தரும்படி ரிசர்வ் வங்கி கேட்டு உள்ளது. இதன் பின்னர் ரிசர்வ் வங்கி இதன் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.