மலேசியா கோலாலம்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வெ. 1.3 மில்லியன் நிதி.

கோலாலம்பூர்:
எரிசக்தி, இயற்கை வள அமைச்சகம் 2020 ஜூன் மாதம் தேசிய மிருகக்காட்சி சாலை பராமரிப்புக் காரணமாக வெ.1.3 மில்லியன் நிதியை (டானா பிரிஹாத்தின் கெபாஜிகான் ஹிடுப்பான்) ஒதுக்கியிருக்கிறது.

அதன் அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அனுவார் நஸாரா நேற்று ஓர் அறிக்கையில், வனவிலங்கு , தேசிய பூங்காக்கள் துறையின் மூலம் (பெர்ஹிலித்தான்) இந்த நிதி, விலங்குகளின் உணவு விநியோக செலவுகளை ஈடுகட்ட கோவிட் காலத்தில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

பாதிக்கப்பட்ட உயிரியல் பூங்கா, நிரந்தர கண்காட்சி (ZPT) வளாகங்களுக்கு வனவிலங்கு நல பராமரிப்பு நிதியின் திட்டத்தின் கீழ் அமைச்சகம் வெ.10.2 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.

வனவிலங்குகளின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வளாகத்தின் இயக்க செலவுகளின் சுமையை குறைக்கும் நோக்கமாகக் கொண்டது இந்த ஒதுக்கீடு என்றார் அவர்.

மலேசிய தனிமைப்படுத்தப்பட்ட, ஆய்வு சேவைகள் பிரிவு (MAQIS) 15 டன் நன்கொடை பொருட்களான இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உட்பட பொருட்களை வளாகத்திற்கு விநியோகிக்கிறது.

இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) பாதிக்கப்பட்ட ZPT (உயிரியல் பூங்கா, நிரந்தர கண்காட்சி ) நடத்துநர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் சிக்கலை சமாளிக்க அரசாங்கத்தின் பங்கு குறித்து சமூகத்திலிருந்து கேள்விகள் எழுந்தன,இவ்வாறு ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பிரச்சினைகள் பரவிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார் .