சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இந்தோனேசியர்களை காவல்துறை கைது செய்தனர்..!!

சிங்கப்பூரில் 25, 58 வயதுடைய இரண்டு இந்தோனேசியர்கள் சட்டவிரோதமாக நுழைந்தனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தன. நேற்று முன்தினம் ஒருவர் சாங்கி கண்காட்சி நிலையத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் நுழைவதற்கு முன்பாக சந்தேகமான முறையில் நடந்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.

தேசிய பூங்கா கழகத்தின் குத்தகையாளர் ஒருவர் கடலோர காவல் படையினர் இந்த தகவலை கொடுத்துள்ளார். தகவல் பெற்ற உடனே விரைந்து சென்ற கடலோர காவல் படையினர், காவல்துறை பிரிவினர், கூர்கா படையினர் போன்றோருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இவர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் இவர்களிடம் இருந்து தீர்வை செலுத்தப்படாத 300 சிகரெட் பெட்டிகளையும் கண்ணாடி இழை படகும் இதன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக 6 மாதம் வரை சிறை தண்டனையோ குறைந்தபட்சம் மூன்று பிரம்படியும் வைக்கப்படும். பொருட்களை வைத்து இருந்த குற்றத்திற்கு தீர்வை போல் 40 மடங்கு வரையிலான அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் . இரண்டு பேர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இவர்கள் குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.