சிங்கப்பூர் செந்தோசாவில் புதிய உல்லாசத்தல ஹோட்டல் அடுத்த ஆண்டு திறப்பு..!


செந்தோசாவில் புதிய ஹோட்டல் ஒன்றை அடுத்த ஆண்டு திறக்கவிருப்பதாக Far East Hospitality நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் கட்ட மாதத்தில் , Oasia Resort Sentosa திறக்கப்படும் எனும் ஹோட்டல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் Le Meridien Hotel and Spa மூடப்பட்டதைத் தொடர்ந்து அதே
இடத்தில் புதிய ஹோட்டல் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே Far East Hospitality நிறுவனம் 3 ஹோட்டல்களை நிர்வகித்து வருகிறது.,ஆனால் Oasia Resort Sentosa தான் அதன் முதல் உல்லாசத்தல ஹோட்டலாகத் திகழும்.

உள்ளூர் நிறுவனமான அது, புதிய ஹோட்டலின் செயல்பாடுகள், விளம்பரம், வர்த்தகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும்.