சிங்கப்பூரில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புதிய சலுகைகள் வர உள்ளன ..!!

சிங்கப்பூரில் நீரிழிவுநோய் கொண்டவர்கள், சுகாதார பயிற்றுவிப்பாளர்களின் சேவைகளையும் ActiveSG இயக்கத்தின் கீழ் உள்ள உடற்பயிற்சி வசதிகளில் விரைவில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக SportsSG, Diabetes Singapore இரண்டும் கையெழுத்திட்டன.

உலக நீரிழிவு நோய் தினத்தை நினைவுபடுத்தும் வகையில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். மேலும் 2 இணக்க குறிப்புகளிலும் Diabetes Singapore கையெழுத்திட்டது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு, அதற்கான பரிசோதனை, செயற்கை உறுப்புகளை பொருத்துவதற்கான மருத்துவ பரிந்துரை போன்றவற்றில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதில் அதிக கவனம் செலுத்த உள்ளது.

மேலும் சமூக அளவில் நீரிழிவு நோய்க்கு எதிராக Diabetes Singapore ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முதியவர்களுக்கானது. இந்த திட்டத்தின் வழி அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தொண்டூழியர்கள் ஊக்குவிக்க உள்ளனர்.

உடற்பயிற்சி ஊட்டச்சத்து மன அழுத்தத்தை சமாளிப்பது போன்ற அம்சங்களில் திட்டம் அதிக கவனம் செலுத்த உள்ளது.