சிங்கப்பூரில் நேற்று 3 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகிஉள்ளது..!!

சிங்கப்பூரில் புதியதாக நேற்று 3 பேருக்கு கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூன்று பேருமே வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

இவர்கள் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். இதில் 2 பேர் இந்தியாவில் இருந்து வந்த சிங்கப்பூர் வாசிகள்.

மற்றொருவர் வேலை தொடர்பாக இத்தாலியில் இருந்து சிங்கப்பூர் வந்த பொறியாளர். இவர் குறுகிய கால வருகை அட்டை வைத்திருப்பவர். புதிதாக பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு நிறைவேற்றி வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் அறிவித்தது.