சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப கழகத்திற்கு சீனா குலமரபு சங்கம் $1.8 மில்லியன் நன்கொடை அளித்துள்ளது..!!

சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான சீனக் குலமரபுச் சங்கம், சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப கழகத்திற்கு ஒரு $1.8 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் இல்லாத கட்டடங்களை உருவாக்க இந்த நன்கொடையை பயன்படுத்தப்படும் என்று அது உறுதி அளித்துள்ளது.

பாரம்பரியத்தை கட்டிக் காப்பது மட்டுமில்லாமல் காலத்திற்கு ஏற்ப மாறிவரும் சங்கம் ஹாக்கியென் ஹுவெய் குவான் சங்கம். தனது 150வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. இதை முன்னிட்டு கிருமித் தொற்று பரவும் சூழலில் வறுமை ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சங்கம் உதவியுள்ளது.

வசதி குறைந்த 400 பேருக்கும் ஆளுக்கு 500 வெள்ளி கல்வி உதவி உதவி நிதி வழங்கப்பட்டது. சிங்கப்பூரிலும் ஆசிய வட்டாரத்திலும் சங்கம் கடந்த 150 ஆண்டுகளில் ஆற்றிய பங்கை நினைவுகூறும் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார். அவர் பல்வேறு சமூகங்களுக்கு இந்த சங்கம் மக்களுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பேசினார்.